பிரிட்டனில் -33 ஆண்டுக்கு பின் அமோக வெற்றி -இரவு பகலாக மக்களுக்கு உழைப்பேன் – ஜோன்சன் அதிரடி அறிவிப்பு
பிரிட்டனில் நேற்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய பெரும் ஆணை ஆளும் கன்சவே பார்ட்டியை மேலும் வலுவாக்கியுள்ளது ,
தனி பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்க தேவை பட்டது 326 ஆசனங்கள் ,ஆனால் இங்கே 363
ஆசனங்களை பெற்று தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க பட்டுள்ளது ,
இந்த சாதனை என்பது 1980 ஆண்டுக்கு பின்னர் 33 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட இமாயலய வரலாற்று சாதனையாக பதிய பெற்றுள்ளது .மேலும் என்னை நம்பி
வாக்கு அளித்த மக்களுக்கு இரவு ,பகல் பாராது நான் உழைப்பேன் என ஆளும் பிரதமர் ஜோன்சன் அதிரடியாக அறிவித்துள்ளார் ,
203 ஆசனங்களை பெற்று பெட்டி பாம்பாகி சுருண்டது தொழில் கட்சி ,ஐரோப்பாவையும் எதுவித பணமும்
செலுத்தாது நான் விலகுவேன் என ஜோன்சன் தெரிவித்திருந்தார் ,
அதற்கு அமைவாக இவர் இனி செயல் படுவார் என துணிகரமாக நம்ப படுகிறது ,அடுத்து இவரது தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியிலிவர் ஈடுபட வேண்டும் .
அல்லது அடுத்து வரும் ஐந்தாண்டுக்கு பின்னர் இவர்கள் படு தோல்வியை நோக்கி செல்ல நேரிடும் என்பதே இந்த முடிவுகளை வெளிக்காட்டியுள்ளன