பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு புதிய வீடு

இதனை SHARE பண்ணுங்க

பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு புதிய வீடு

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவு கிராமத்தில் வருமானம் குறைந்த

குடும்பம் ஒன்றுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, புதிய வீட்டை அமைத்துக்

கொடுப்பதற்கான நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் அண்மையில் ஆரம்பமானது.

பின்தங்கிய பிரதேசமான கட்டுமுறிவு கிராமத்தில், பாம்பு தீண்டி உயிரிழந்த ரவித்திரன்

கிருத்திகா எனும் 4 வயது சிறுமியின் பெற்றோருக்கே இந்த வீடு அமைக்கப்படுகிறது..

இதுதொடர்பான நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உயர் அதிகாரிகள், தேசிய வீடமைப்பு

அதிகாரசபையின் அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் செயலாளர்கள், பிரதேச இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply