பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்


பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுமார் நான்கு மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதன்படி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாத்திரம் இன்றைய தினம் பாடசாலைக்கு

சமூகமளிக்க வேண்டும். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன. இன்றைய தினம் முதல் கட்டமாக மாணவர்களை தவிர்த்தே பாடசாலை செயற்பாடுகள்

ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைவாக முதல் வாரத்தில் பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழல் சுத்தப்படுத்தப்பட்டு, தொற்று நீக்கி விசிறப்படவுள்ளது.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்று நிருபமும், வழிகாட்டல்களும் சகல பாடசாலைகளுக்கும்

வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார். அனைத்து பாடசாலைகளும் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டுள்ளதா என்பதனை

கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சருடன் இணைந்து ஒருவார காலம் பாடசாலைகளை கண்காணிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளது. தரம் 05, 11, 13 ஆகிய வகுப்பு மாணவர்கள் இரண்டாம் கட்டத்தில் பாடசாலைகளுக்கு

அனுமதிக்கப்படுவார்கள். தரம் 10, 12 மாணவர்கள் மூன்றாம் கட்டத்தின் கீழ் யூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு

செல்வதற்கு அனுனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தின் கீழ், தரம் 03, 04, 06, 07, 08, 09 வகுப்புகளைச் சேர்நத மாணவர்களக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.