பாகிஸ்தானில் தரையிறங்கிய 22 பேர்-விமான நிலையத்தில் நடந்தது இதுதான்.

Spread the love

பாகிஸ்தானில் தரையிறங்கிய 22 பேர்-விமான நிலையத்தில் நடந்தது இதுதான்..

கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாக்கிஸ்தான் சென்றுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உள்ளிட்ட

இலங்கை வீரர்களுக்கு லாகூர் விமான நிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

பாக்கிஸ்தான் லாகூரில் நாளை தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள சர்வதேச

குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து

வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசிகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல்,

எஸ்.சிறிதர்சன் மற்றும் கெ.நிரோஜன் உள்ளடங்களாக 22 வீரர்கள் இன்று பாகிஸ்தான், லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக்

இப்திகார் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வீரர்களுக்கு மாலை அணிவித்து அமோக வரவேற்பளித்தனர்.

நிருபர் – வெடியரசன்

பாகிஸ்தானில் தரையிறங்கிய
பாகிஸ்தானில் தரையிறங்கிய

Spread the love