பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம் முழக்கம்

பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம் முழக்கம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம் முழக்கம்

இலங்கையில் சிறுபான்மை தேசிய இனமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமது பரம எதிரிகள் என சிங்கள இனவாதம் முழக்கம் இட்ட வண்ணம் உள்ளது .

தமிழர்கள் பூர்விக பகுதியை ஆக்கிரமித்து அங்கு நிலை கொண்டுள்ள சிங்கள இனவாதம் தமிழர்கள் பாரம்பரிய முறைமைகள் மற்றும் கலாச்சார நுகர்வுகளை கலர்ப்படம் செய்து வருகிறது .

Follow ME

போருக்கு பின்னரான கால பகுதியில் பண்பட்ட தமிழ் தேசியத்தின் கலாச்சார பண்பாட்டை சிதைத்து போருக்கு பின்னரான ஓசை படாத இனவாதத்தை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது .

தமிழர்கள் முக்கிய பகுதிகள் எங்கும் புத்த விகாரைகள் நிர்மாணிக்க பட்டு வருகின்றன.

இலங்கை இனவாத சிங்களவர்களுக்கே உரியது என்ற வகையில் பரம எதிரி சிங்கள இனவாதம் புரிந்த வண்ணம் உள்ளது .

தமிழர் பகுதிகள் எங்கும் திட்டமிடப் பட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் போதைவஸ்து பாவனை வாழ்வை விஸ்தரித்து தமிழர்கள் சிந்தனையை மழுங்கடித்து குற்றவியல் சமூகமாக மாற்றிய வண்ணம் உள்ளது .


ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் வீழ்த்த பட்டு அந்த மண்ணில் இனப் படுகொலை அரங்கேற்றி மகிழ்ந்த சிங்களம் .

தற்போது இன கலப்பை மேற்கொண்டு வருவதுடன் தமிழர்களின் தேசிய அடையாளங்களை சிதைக்கும் முக்கிய நகர்வுகளை திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .

நமது நேரடி மற்றும் பரம எதிரி தமிழர்கள் தான் என்பதை நினைவில் வைத்து இவ்விதமான அடக்குமுறை ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு தமிழர் தேசியத்தின் தேச கனவுகள் சிதைத்து வருகிறது .

பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம்

ஈராக்,லிபியாவில் மக்களை அடக்கிய அரசுகளை பயங்கரவாதம் என்ற போர்வையில் புகுந்த அமெரிக்கா வல்லாதிக்கம் ,அந்த நாடுகளை நாற்பது ஆண்டுகால ஆட்சியாளர்களை வேரோடு புடுங்கி எறிந்தது .


அதன் பின்னர் அந்த அரசுகளுக்கு எதிரான குழுக்களை உருவாக்கி இரத்தம் தோய்ந்த போர் ஒன்றை அங்கு கட்டவிழ்த்து விட்டுள்ளது.

பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம் முழக்கம்

அவ்வாறான ஓர் போர் இலங்கையில் வெடிக்க போகிறது ,பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மேலும் பலத்த பின்னடைவுகளை சந்திக்க போகிறது .

ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு கண்டு அமைதியான நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இனவாத சிந்தார்ந்துக்குள் தம்மை மூழ்கடித்து வளமான இலங்கை திருநாட்டை சுடுகாடாக்கி நகர்கிறது .

ஒன்று பட்டு அனைவரும் பயணிக்கின்ற ஒருமை பாட்டு முழக்கத்துடன் நேசக்கரம் நீட்ட வேண்டிய வேளையில் ,இனவாத பார்வையை விதைத்து குற்றவியல் சமுகமாக

தமிழர்களை உருவாக்கி செல்லும் சிங்கள ஆட்சியாளர்களின் மனோ நிலையில் இனவாதம் அழியாது என்பதை தற்கால நிகழ்வுகள் தெளிவாக கட்டியம் இடுகின்றன .

ஒன்றிணைந்த இலங்கையில் பரம எதிரிகளாக தமிழர்கள் உள்ளார்கள் என கருதும் சிங்கள இனவாத சாய முகம் கிழிக்க படும் நாளே இலங்கை வாழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாளாக மாற்றம் பெறும் .

சிங்கள இனவாதம் என்றும் மாறும்

அரசியல்வாதிகளின் அடிப்படை சித்தார்த்த கோட்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் வரை இலங்கை நின்மதியாக உறங்கிட முடியாது என்பதற்கு வரும் காலங்களில்

இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை அரசியல் அதிரடி தலைகீழ் திருப்பங்கள் இதனை உணர்த்தும் .

அப்போது இவர்கள் விழிகளில் கண்ணீர் மட்டுமே எஞ்சி இருக்கும் .தவறுகளை புரிந்தவர்கள் அன்று கல்லறையில் உறக்கமிடுவார்கள் ,ஆனால் அதன் வழித்தடம் மாறாமல் பயணிக்கும் .

தமிழர்கள் பரம எதிரிகள் இல்லை என்பதை என்று உணரும் இந்த சிங்கள பவுத்த பேரினவாத தேசம் …?