நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி

நைரியா வெள்ளம் 115பேர் பலி
Spread the love

நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி

நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி நையீரியாவில் கடும் வெள்ளம் 115பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பெருக்கு மழை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்பு

இந்த வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகிறது. இதுவரை 115 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து காணப்படுகின்றன.

பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் , மக்கள் சொல்லன் துயரை சந்தித்து வருகின்றனர்.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

36 மாவட்டங்கள் மிகவும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .தொடர்ந்து பல குளங்கள் ஏரிகள் என நிரம்பி வழிவதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள். இடம்பெயர்நது செல்வதாகவும், அவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.

தாழ்நில பகுதிகளாக காணப்படும் பகுதிகளில் ,அதிகமான வெள்ளம் உள் நுழைந்ததிலேயே இந்த மக்கள் பெரும் இழப்பையும் உயிரிழப்பையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் அதற்கு மக்கள் சிக்கி .அப்படியே பலியான சம்பவங்களே பெரும் துயரை ஏற்படுத்தி உள்ளது.