நீ வர வேண்டும் ….!

நீ வர வேண்டும்

நீ வர வேண்டும் ….!

வான் எழுந்த வெண்ணிலவு
வாசலிலே வீழ்ந்தது
கோலம் உண்ட எறும்புகளும்
கூடி நின்று அழுதது

தேடி வந்த குயில்களும்
சேவை இன்றி கிடந்தது
தேகம் இழந்து தேசமொன்று
தெரு பிச்சை ஆனது

வாடியின்று விழிகள் எல்லாம்
வார்த்தை இன்றி கிடக்குது
வானமதில் உதயமதன்
வரவை இன்று தேடுது

நாளை ஒரு வேளையது
நாடு வந்திடாதோ …?
நாங்கள் வாழ ஒளிக்கீற்றை
நம்பி தந்தி டாதோ …?

கதவில்லா வீட்டுக்குள்ளும்
கண் உறங்க வேண்டுமே
கரிகாலா உன் எழுச்சி
களம் வர வேண்டுமே ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 02-02-2021

Spread the love