நீயா இறந்தாய் ..?


நீயா இறந்தாய் ..?

பாடு நிலா -எங்கள்
பாட்டு தலைவன்
பாடையில போறான்
பாலு எங்கள் நண்பன்

உன்னை கொல்ல கொரனோ
உள்ளம் விட்டதாரு ..?
உன்னை இழந்து தவிக்க
உலகில் வைத்ததாரு …?

பாலா இன்று வருவாயா
பாட்டு ஒன்று தருவாயா ..?
காலனே உயிர் தருவாயா
கை தட்டுகிறோம் விடுவாயா …?

சொந்தம் என்று சொல்ல
உள்ளம் நின்றவன்
எம் ஏக்கம் தனித்து
எழுந்து நடக்க வைத்தவன்

வெந்து மனம் நோக
வேக வைத்த ஆண்டவனே
உந்தன் செயல் தகுமா
உண்மையில் நீ இறைவனா …?

கொடிய அணுகுண்டாய்
கொரனோ நுழைந்ததே
உடல் உறுப்பை தின்றே – உன்
உயிர் குடித்ததே

பாடு நிலா உதிர்ந்ததே
பால் நிலவும் இருண்டாதே
வீடு வந்த கீதம்
விடியல் இழந்து போனதே …!

-வன்னி மைந்தன் –
25-09-2020

நீயா இறந்தாய் ..?
நீயா இறந்தாய் ..?