நீ வந்தால் நான் மகிழ்வேன் …!

இதனை SHARE பண்ணுங்க

நீ வந்தால் நான் மகிழ்வேன் …!

விண்ணிலவு வீதியிலே ஏன் நடந்ததோ
விடலைகள் உருகிடவே ஏன் வைத்ததோ
சின்ன விழி பார்வையிலே சிறை வைத்ததே – பறவை
சிறகின்றி ஏன் நடந்ததோ

முளை விட்ட நாற்றும் உருகிடாதோ -இந்த
முழு நிலவை கண்டு பதறிடாதோ
அருகில் வந்து அணைத்திடாதோ – ஏக்கம்
ஆறாய் நெஞ்சில் பாய்ந்திடாதோ

இஞ்சி இடையிலே சிக்கி இதயம் தளம்புதே
இந்த நிலையிலே மனமும் வெம்புதே
பூவுக்கு அழகை ஏன் படைத்தான் – இந்த
புவியில் ஆணை ஏன் ஏங்க வைத்தான்

கண்ணுறங்கி போகுமோ – இல்லை
காதல் கொண்டு தொடருமோ
என்ன இது விதியோ
ஏன் இறைவா இந்த சதியோ

மின்னல் ஒன்று கண்ணிலே
மின்னி ஏன் வீழ்ந்தது
நெஞ்சில் காதல் முளைவிட
நேரில் ஏன் வந்தது

தொடை காட்டி கால் நடக்க
தொலையமால் இருக்குமோ -விழி
தொடராமல் மறையுமோ – இந்த
தொடரும் தான் முடியுமோ

ஆசை நாவூற அதிலேறி சுவை ஏற
அந்தி மறைந்தது அதிகாலை விடிந்தது
உடலும் ஒடிந்து நலிந்தது
உருமாறி அகவை முடிந்தது

அலை ஆட பட கோடும்
அதுபோல மனதாடும்
விண்ணிலவே நீ வந்தால்
விடுதலை உடன் பிறக்கும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 29-11-2021


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply