நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ….!


நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ….!

அறுவடையின் நாளுக்காய்
அலங்காரம் செய்து
காத்திருக்கும் நெற்கதிராய்
கண்ணுக்குள் நீ ….

ஊட்டி ஊட்டி வளர்த்தவனே
உன்னை அறுக்கின்ற நாள் …
உழவு சக்கரத்தில்
உன்னை மிதிக்கும் நாள் …

நேசித்தவனே உன்னை
நெஞ்சில் குத்தும் நாள் …
காலம் இது தான்
கண் முன்னே கடக்கிறது …

உன்னோடு வருவதற்கு
உறவுகள் யாருமில்லை ..
காணீரை துடைப்பதற்கு
கரங்கள் ஏதுமில்லை …

நட்பு என்று சொல்ல
நாவில் ஏதும் இல்லை …
தப்பான காலத்தில்
தளிர்களை காணவில்லை …

முடிந்து போன முடிவுகளினால்
மூழ்கி போன தேசம் ….
நீந்தி கரையேற முடியாது
நீச்சல் இன்றி தவிக்கிறது ….

விதைகள் முளைக்கும் என்ற
விசால நம்பிக்கையில் …
கனத்த வலிகளுடன் ….
கால்கள் நடக்கின்றன

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 04-06-2020