தேவாலயத்திற்குள் கைக்குண்டு
தேவாலயத்திற்குள் கைக்குண்டு சரியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு நாடகம் தொடர்பில் புதிய விசாரணைகளை
மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை இன்று வலியுறுத்தியுள்ளது.
ஜனவரி 11, 2022 அன்று தேவாலயத்திற்குள் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக தேவாலயத்தின் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தச் செயல்களால் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், அவரது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் திருச்சபை தெரிவிக்கிறது.
தேசிய கத்தோலிக்க தொடர்பு இயக்குனர் அருட்சகோதரர் ஜூட் கிரிசாந்த இந்த சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை திருச்சபை வலியுறுத்தவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின் போது சந்தேக நபர் ஒருவர் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த சந்தேக நபர் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க விரும்புகின்றோம்.
அரசாங்கம் இது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலையில் பதிவாகிய சிசிடிவி காணொளிகளை மாத்திரம் ஆராய்ந்தால் போதுமானது என தேசபந்து கூறினார்.
ஆனால் காலையில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கிளிப்பில் தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வைப்பது பதிவாகியது” என Fr. ஜூட் மேலும் கூறினார்.
















