தூக்கில் தொங்கிய நிலையில் – நபர் சடலமாக மீட்பு


தூக்கில் தொங்கிய நிலையில் – நபர் சடலமாக மீட்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர்

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

76/1, பேராறு, கந்தளாய் பகுதியைச் 36 வயதுடைய ஏ.றுமைஸ் என்பவரே இவ்வாறு வீட்டுக்குள் கயிற்றினை கட்டி தூக்கில் தொங்கி

தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில் மன நோய்க்குட்பட்டு இருந்த நிலையிலே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டு

அறைக்குள் சென்று கயிற்றினால் கட்டி தூங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்

ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.