துரோகியே செத்து போ …!


துரோகியே செத்து போ …!

ஏர் பிடித்து நான் உழுத
ஏக்கர் காணிகளை
யார் பிடித்து ஆள்வதுவோ
யாகம் நடக்கிறது

போர் பிடித்து மண் பறித்த
பொல்லா படை ஆழ
யார் பிடித்து இன்றென்ன
யாவரும் ஆழட்டும்

வேர் பிடித்து நாம் ஆளும்
வேளையது வருவீர்
வேண்டி நீர் பறித்தீர்
வேண்டி வந்து தருவீர்

ஆணவம் தலை பிடித்து
ஆடி அன்று நின்றீர்
ஆதலால் இன்று
அடி பணிந்து வந்தீர்

கூ னுள்ளம் புடை சூழ
கூனி போனீர்
எது செய்வீர் இனி
எழுந்தே இறந்து போவீர் …!

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 22-06-2020

துரோகியே செத்து போ
துரோகியே செத்து போ