துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது


துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இருவர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் வைத்து ஒருவரும்,

உடவலவை பகுதியில் வைத்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் இன்று (19) அதிகாலை கைதானவர் 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உடவலவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்

கல்பொத்தயாய பகுதியை சேர்ந்த 48 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மன்னார் மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.