தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா


சீனாவுடன் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலையில் தைவானுக்கு மிகப்பெரிய அளவில் ஏவுகணைகள் உள்பட ஆயுதங்களை

விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் – தைவானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு?

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங்

2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

இதற்கு, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில், தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தைவான் நாட்டிற்கு அமெரிக்கா அதிக அளவில் ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது.

மேலும், தைவானுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆனால், தைவானை தனது

நாட்டின் பகுதியாகவே கருதும் சீனா தொடர்ந்து அந்நாட்டு வான்பரப்பில் அத்துமீறி


போர் விமானங்களை பறக்கவிட்டு வருகிறது. மேலும், தைவான் நாட்டின் கடல்பரப்பு எல்லை அருகே கடந்த சில நாட்களாக சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் இந்த அத்துமீறிம் செயல்களுக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு

பதிலடியாக தங்கள் நாடும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தைவான் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் சீன கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தைவான் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு

செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஆயுத விற்பனையில் ஏவுகணைகளும் உள்ளடக்கம் என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரங்களால் தைவான் – சீனா இடையே மோதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்,

அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி கேய்த் ஹர்ச் திடீர் பயணமாக நேற்று தைவான் வந்தடைந்தார்.

தைவான் – சீனா இடையேயான மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி தைவான் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.