தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்
தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி
அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களது தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்லம் அடைக்கலநாதன், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் யாழ். மாநர மேஜர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்,
உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

- தலைமை கணக்காய்வாளர் சம்பள உயர்வு குறித்த வாக்குவாதம்








