டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை

சுட்டு தற்கொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை- போலீசார் விசாரணை
டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையை அடுத்து தலைநகர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி ஜிது சவுத்ரி மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் அங்கிருந்து தப்பினர்.

இந்த கொலை குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச் தோட்டாக்கள் உள்பட
இந்த கொலை தொடர்பான சில ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெறுவதாக டெல்லி கிழக்கு பகுதி காவல்துறை அதிகாரி பிரியங்கா காஷ்யப் தெரிவித்தார்.

மருத்துவமனையில் ஜிது சவுத்ரி உடலை பார்வையிட்ட டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அவர் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.


பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.