ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோ அறிவித்துள்ளார்.
இறுதி யுத்தப் பகுதியில் தமிழர்களை அழித்து மிகப்பெரும் நயவஞ்சகத் தாக்குதலையும் மேற்கொண்ட ஒரு இனவாதியாகவும் இராணுவ தளபதியாகவும் சரத் பொன்சேகா விளங்குகின்றார் .
அவ்வாறான நிலையில் அவர் தற்பொழுது ஜனாதிபதியாக வேட்பாளராக போவதற்கான தேர்தல் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் இவர் மக்களுக்கான வாக்குகளை சிதைக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபட உள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
சஜித் அணியில் இணைந்து செயல்பட்ட இவர் அதிலிருந்து விலகி தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போகிறார் என்கின்ற விடயமே தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
சஜித்துக்கு எதிராக பல்வேறுபட்ட கருத்துக்களை இவர் முன்வைத்து வந்தார்.
அவ்வாறான நிலையில் தற்போது இவரை அந்த கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கட்சியினுடைய ஸ்தாபித்து அதனுடன் பயணித்து வருகின்றார் அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் இவர் போட்டியிட்டால் இவருக்கு வேகமான வாக்குகள் கிடைக்கப்பெறுமா என்கின்ற தகவலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் தமிழர்களையும் புலிகளையும் தானே அழித்தேன் என தேர்தல் பிரச்சாரங்களில் இவர் சிங்கள மக்கள் மத்தியில் பேசி வந்தார்.
அவ்வாறு இனவாதத்தை கக்கியும் தமிழின படுகொலை யை நியாயப்படுத்தியும் அவ்வாறு செய்தது சரிதான் என்பதை கூறிவந்த இவரை ,தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் இன்றைய கேள்வியாகவும் இருக்கின்றது.












