சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது.
பேரூந்து புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில் பயணிகள் போர்வையில் ஏறியிருந்தனர்.
இதேவேளை கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் பேரூந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேரூந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க முற்படும்போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேரூந்தில்
பொருத்தப்பட்டிருந்த இரகசிய காமராவினை தனது கை பாய்க்கினால் மறைக்கும் போது மற்றைய பெண் கொண்டாளில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைபாய்க்கினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த யாழ். குடும்பத்தினருக்கு பேரூந்து நடத்துனர் பணம் களவாடப்பட்டு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேரூந்தில் பயனித்திருந்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேரூந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண்
என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று
- தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா
- முற்றாக பற்றி எரிந்த வீடு
- கொழும்பு துறைமுகத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகிய அதானி நிறுவனம்
- அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
- பாடசாலை சீருடையை வழங்கிய சீனா
- கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை
- 2025 பட்ஜெட் தயாரிப்பதற்கான விவாதங்கள் தொடங்குகின்றன
- எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு
- தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்