செத்து போன காதல்
ஆள் மனசு தேடுதடி – விழி
ஆறாக ஓடுதடி
காணாமல் போனவளே – உன்
கால் தடத்தை தேடுகிறேன் …
வேராகி முளைத்தவளே – நெஞ்சை
வேலெடுத்து அறுத்ததென்ன ..?
கூடு ஒன்று மாறிட தான்
குயிலே கூவ மறந்தாயோ …?
பாவமடி பெண் மயிலே – இந்த
பாவி என்ன செய்திடுவேன் …?
தேம்புதடி உன் நினைவு – எனை
தேற்றிடத்தான் வாராயோ …?
நாள் கணக்காய் காத்திருந்து
நாட்களிலே வாடி விட்டேன் …
பேச்சிழந்து போனவளே – என்
பேரன்பை ஏன் தொலைத்தாய் ..?
மூச்சிழந்து போகு முன்னே
முகம் வந்து காட்டாயா ..?
ஆள் மனதில் உனை வைத்தேன்
அடியே மறந்து போயிடவோ ..?
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/10/2018