சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் – மட்டக்களப்பு


சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் – மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபோக நெல் அறுவடை துரிதமாக இடம் பெற்று வருகிறது.

மாவட்டத்தின் நெல் அறுவடையினை சம்பிரதாய பூர்வமாக விசேட நிகழ்வுகளை நடாத்தி சகல கமநல சேவை பிரிவுகளிலும்,

விவசாயிகள் நெல் அறுவடை விழாக்களை சமய நிகழ்வுகளுடன் நடாத்தி ஆரம்பித்துள்ளனர்.DSC 0285 1

பட்டிருப்புப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சுபாகரன் தலைமையில் நேற்று (29) மாவடி முன்மாரிப் பகுதியில் நெல் அறுவடை விழா நடைபெற்றது.

இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் பத்ம ராஜா கருத்துரை வழங்குகையில் புளுக்குணாவி பிரதேச விவசாயிகளின் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்கு முந்திய

காலத்தில் நீர்ப்பாசனம் இன்றி இருந்த போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உறுதுணையால் கலுகல் ஓயா

நீர்ப்பாசணத்திலிருந்து நீர் கிடைத்ததன் பயனாகவே இன்று இப்பிரதேசத்தில் விவசாயிகள் நெல் அறுவடையினை சிறப்பாக

செய்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு உதவி செய்த அம்பாறை அரசாங் அதிபரின் பணியினை பாராட்டுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

இதேவேளையில் அம்பாறை மாவட்ட விவசாயிகள் தற்பொழுது கரைவாகு வட்டப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் நீரில் மூழ்கியுள்ள நெல்வயல்களினை காப்பாற்ற எமது பிரதேசத்தில்

சாத்தியமற்ற மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயை வெட்டுமாறு கொடுத்த கோரிக்கையை துறைசார் தொழிநுட்ப

அதிகாரிகள் தெரிவித்த பெருத்த பாதிப்புகள் பற்றிய ஆட்சேபனையினை அடுத்து நிறைவேற்ற முடியாததை இட்டு பெரிதும் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்காலத்தில் ஆரம்ப கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கமைய நீப்பாசனம் பெறக்கூடிய வயல்களில்

மாத்திரமே நெற்செய்கையை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.