சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்

Spread the love

சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.

சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன், கேரி சைமண்டஸ்
லண்டன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் லண்டன்

மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.

    கொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன்

    நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் கடந்த வாரம் பணிக்குத் திரும்பினார்.

    ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக, போரிஸ் ஜான்சன் காதலி கேரி சைமண்ட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ள

    செய்தியில், கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த

    இரு டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    சிகிச்சை அளித்த
    சிகிச்சை அளித்த

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *