சாரதிகளுக்கு எச்சரிக்கை – கடுமையாகும் புதிய சட்டம்


இந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் கொழும்பின் 4 பிரதான வீதிகளில்

அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்குவிதிகள் நாளையிலிருந்து

கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு நாளை (21) முதல் ஆலோசனை

வழங்கும் வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோரை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை

முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி

பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.