சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் – நாம் தமிழர் கட்சி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மனித
உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து மனித உரிமை ஆர்வளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வளரும், டெல்லி உச்சநீதிமன்ற
வழக்கறிஞருமான திரு.பாரிவேந்தன் அவர்கள் கலந்துரையாடினார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு.ராஜீவ்காந்தி அவர்கள் இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்த விவரித்தார்.
கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் எடுத்துரைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் டிசம்பர் 8 2019
ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அப்பாசறையின் பொறுப்பாளர்களான திரு.மதுசூதனன், திருமதி. சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினக் கருத்தரங்கின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.