
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன் ,ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் இலங்கை வத்தளையை சேர்ந்த விஜய் லோசன் பாடல் பாடி அசத்தியுள்ளார் .
விஜய் லோசன் முதல் பாடல்
விஜய் லோசன் முதல் பாடல் அவள் உலக அழகியே என்ற பாடலை பாடியிருக்கிறார் .அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் தனது போட்டியை ஆரம்பித்துள்ளார் .
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் ,இலங்கையில் இருந்து மூவர் கலந்து கொண்டுள்ளனர் .
பதுளையை சேர்ந்த இந்திரஜித்
அதில் மலையகம் பதுளையை சேர்ந்த இந்திரஜித் ,சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா ,ஆகிய மூவரும் கலந்து சிறப்பித்து வருகின்ற்னர் .
கில்மிசா ,அசானி கலந்து கொண்டு அசத்தி சாதனை நிலை நாட்டிய பின்னர் ,தற்போது இவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வு மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
தமிழகம் ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா
எமது இலங்கையை சேர்ந்தவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா அங்கிகாரம் வழங்கி கவுரவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கனவுகளை சுமந்து இந்த சரிகமபா நிகழ்வில் கலந்து கொண்டு பாடும் இந்த பாடும் குயில்கள் வெற்றி பெறவேண்டும் .
முதலாவது இடத்தை தட்டி பறிக்க வேண்டும் என்பது நோக்கல்ல ,இந்த சரிகமபா மேடையில் ஏறிவிட்டாலே அதுவே பெருமை என்பதே இன்றைய நிலையாக உள்ளது .
ஈழ தமிழர்கள்
அதற்காக உலகம் தழுவிய ஈழ தமிழர்கள் ,தமிழக தொலைக்காட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் .
அவ்விதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் விஜய் லோஷன் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் .
இலங்கை வத்தளை மக்களுக்கு சரிகமபா பாட்டு அரங்கின் ஊடக, விஜய் லோசன் பெருமை தேடி தருவார் என மக்கள் எதிர் பார்க்கின்றனர் .
மிகவும் இறுக்கமான இந்த போட்டி , இலங்கை வாலிபர்கள் நின்று தாக்கு பிடித்து வெல்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது .
இந்த சரிகமபா நிகழ்வில் ,போட்டி கொண்ட திறமை சாலிகள் மோதி கொள்ள போகின்றனர் என்பதே போட்டியாளர்களை பார்க்கும் பொழுது தெரிகிறது .