
கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks
கடை சுவையில் ,கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks sweet,வாங்க இன்றே கோதுமை மாவில வீடே மணக்கும் snacks sweet செஞ்சு சாப்பிடலாம் .
கோதுமை மாவில் snacks sweet செய்வது எப்படி ..?
மொறு மொறு கோதுமை மாவில் snacks இப்படி செஞ்சு கொடுத்தால் குழந்தைகள் நன்றாக விரும்பி சாப்பிடுவாங்க .
மொறு மொறு கோதுமை மாவில் snacks செய்வதற்கு ,அகலமான பாத்திரம் எடுத்திடுங்க .அதில் இரண்டு கப் கோதுமை மாவு எடுத்திடுங்க .
அரை கப் ரவை ,கால் கப் எள்ளு ,கால் கப் துருவிய தேங்காய் ,கால் கப் நெய் சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .
மொறு மொறு கோதுமை மாவில் snacks செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு சக்கரை எடுத்திடுங்க ,கூடவே கால் கப் தண்ணி சேர்த்திடுங்க .ஒரு கரண்டி ஏலக்காய் சேர்த்து நனறாக கலந்து விடுங்க ,சக்கரை கரையும் வரை காத்திருங்க .
நன்றாக சக்கரை கொதித்து கரைந்து வந்தததும் அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .
இப்போ இந்த சக்கரையை அந்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக உருண்டை பிடிக்கும் பதம் வரும்படி எடுங்க .
snacks செய்முறை மூன்று
இப்ப இந்த மாவை மூன்று உருண்டையாக உருட்டி எடுங்க .அப்புறமா ,சப்பாத்தி போல உருட்டி எடுங்க .

சப்பாத்திக்கு மாவு பூரி கட்டையில் வைத்து உருட்டுவது போன்று உருட்டி எடுங்க .படத்தில் உள்ளது போல .சின்னதாக வெட்டி எடுங்க .
வெட்டி எடுத்ததும் அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிடுங்க ,எண்ணெய் கொதித்து வந்ததும் ,வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொரித்து எடுங்க .படத்தில் உள்ளது போல .

இரு பக்கமும் நன்றாக வேகி வரும் வரை பொரித்து எடுங்க .அவ்வளவு தாங்க .
வாய்க்கு சுவையான மொறு மொறு கோதுமை மாவு snacks sweet ரெடியாடிச்சு .
போத்தல்களில் போட்டு அடைத்து வைத்து மூன்று மாதம் வரை வைத்திருக்கலாம் ,கெட்டு போகாது .
குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணுவாங்க .காலை மாலை நேரம் டீ கூட சாப்பிடுக்கலாம் .அம்புட்டு தாங்க மிக ஈஸியான மொறு மொறு snacks sweet .இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .