கோட்டாபய – பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்
இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம்வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று (29) இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.