கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

கொழும்பு ரயில் சேவைகள் இரத்து
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று(05) இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி மற்றும் ஹட்டனுக்குமிடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவே இதற்கு காரணம்.

இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு காலை 5.55மணி, 8.30மணி மற்றும் 9.45 மணிக்குக்கு சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களும்,

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை 5.45மணி,
8.30மணி மற்றும் 10.15மணிக்கு புறப்படவிருந்த ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்