கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது

கைது

கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்

மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
கைது செய்யப்பட்ட டாக்டர்கள்
:

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 27-ம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார்.

இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட

தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Spread the love