கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு


கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு

கஹதுட்டுவையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக,

கஹதுட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி, தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.

கஹதுட்டுவ- மினுவன்வில வீதியில் மீன் வர்த்தகர் ஒருவருக்கு

கொரோனா ​தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து 6 வர்த்தக

நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தகருடன்

தொடர்பிலிருந்த 8 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.