கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா


கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 257 பேர் ஓகஸ்ட் 02ஆம் திகதி கேப்பாப்பிலவு விமானப்படைத்தளத்தில்

அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டம்

கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போது, 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை (19) 8 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 10 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.