கேட் உடைந்து விழுந்தமையால், 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுமி மரணம்
Spread the love

கேட் உடைந்து விழுந்தமையால், 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பிரதான கேட் உடைந்து விழுந்தமையால், 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம- ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் அபேகோன் பிரியதர்சினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது தாயுடன் தனது பாடசாலை ஆசிரியை ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போது, தாய் கேட்டை திறந்துள்ளதாகவும் இதன்போதே கேட் உடைந்து சிறுமியின் மீது விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே, உயிரிழந்திருந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *