கால் விழுந்த சோம்பேறி …!
கடன் தீர்க்க வழி தேடி
கால் ரேகை தேய்ந்திருச்சு …
கடன் தந்தான் வட்டிக்கு
காத்திருப்பு பெருகிடிச்சு ….
ஊளை உடல் பெருத்து
உலவும் பெருச்சாளி ….
சோம்பல் முறித்தெறிய
சோளிக்கு வந்திடுவான் …..
கனத்த குரல் பிடித்து
கத்தி பேசிடுவான் …
வட்டி இல்லை எனின்
வப்பாட்டிக்கு விடு என்பான் …..
பொயிலை வாய் காரன்
பொண்டாட்டி கேட்டிலுக்க ….
வம்பு பெருக்கெடுத்து
வார்த்தை விழுந்தோட …..
இல்லை பணம் என்று
இடிந்து யான் உரைக்க ….
கால் விழுந்து கதறுவான்
கல்வி இல்லாதான் …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -05/06/2019