காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலிமுகத்திடல் துறைமுக நகரின் கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளங்காணப்படாத நிலையில், சுமார் 4 அடி 9 அங்குல உயரம், பழுப்பு நிற சட்டை அணிந்துள்ளதுடன், அவரது தலைமுடி கழுத்து வரை வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
இதற்கிடையில், தெஹிவளை பொலிஸ் பிரிவில் பீரிஸ் பிரதேசத்தின், கடலோர பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 55-60 வயதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது







