கண்டி சம்பவம்-விசாரணைகள் ஆரம்பம்


கண்டி சம்பவம்-விசாரணைகள் ஆரம்பம்

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இடிந்து விழுந்த 05 மாடி கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதால், சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (20) அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை மாத சிசு உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு

குழுவினரால், மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசு உயிரிழந்தது.

பின்னர், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த ​​​தம்பதியினர் பிற்பகல் 2 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டனர்.

இதேவேளை, கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.