ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
Spread the love

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி ,ஓமந்தை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரினை , யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்தில் சிக்கியது.

இதன் பொழுதே குருக்கள் வயது 52 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

இந்த நிலையில் மூவர் பலமான காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த விபத்தில் சிக்கியவர்கள் ஒரு சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க .

இலங்கையில் கூலிக் குழுக்கள் டிப்பர் வாகனத்தை பயன்படுத்தி வீதி விபத்து என்ற முறையில் ,பிடிக்காத பலரை போட்டு தள்ளி வருகின்ற செய்திகள் வெளியாகியிருந்தன.

அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்று இருக்குமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில கூலி குழுக்களினால் இந்த டிப்பர் வாகனத்தின் மூலம் ,பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகிறது.

அதன் ஒரு அத்தியாயமாக இந்தச் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடிய சந்தேகத்தை இது வெளியிட்டுள்ளது.