உன்னை மறந்தேன் ஓடிவிடு …!
பள்ளி வந்த பருவத்தில
பார்த்த உந்தன் பூ முகத்தை …
நெஞ்சை விட்டு பறித்ததென்ன..?-என்
நெஞ்சை வெட்டி கிழித்ததென்ன …?
கலரு பார்த்து ஆளை பார்த்தா
காதல் நிலைக்காது ….
மனசு பார்த்து ஆளை கோர்த்தா
மகிழ்வு குறையாது ….
இதயம் கிழித்து
இன்முகம் பறித்து …
கண்டாய் என்ன
கருங் குயிலே …?
முன்னே உள்ள கண்ணாடியில் – உன்
முகம் பார்க்கலையா ..?
என்ன வந்து இன்று உரைத்தாய்
ஏளனங்கள் நீயா செய்தாய் …?
பக்கம் இருக்கையில
பாசம் புரிவதில்லை ….
விட்டு பிரிந்த பின்ன
விடயம் புரிந்து பயணில்லை…
அறியாத சிந்தையில
ஆள் மனதை அறுத்தவளே ….
அதை எண்ணி இன்றென்ன
அழுது களைத்தவளே ….?
ஆயிரமாய் கனவு வளர்த்து
ஆசைகளை தேக்கி வைத்து …
உனை தாங்கி நடந்தவன்
உள்ளம் வதைத்தவளே ….
நீயழுது பயனில்லை -என்
நினைவில் நீயில்லை …
பெரும் வலிகள் தந்தவளே -உன்
பேய் மனம் நெஞ்சில் இல்லை ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -03/04/2019