ஒரு நாள் என்னை தேடுவாய் …!
சாலையிலே போகையில – உன்
சேலை நுனி தேடுறேன் …
வாட விட்டு போனவளே
வாழ்க்கை ஒன்றை தேடுறேன் …
ஆடி காற்றாய் ஓடி வந்தாய்
ஆசை ஊற்றி ஆடி மறைந்தாய் …
தோகை மயிலே – உன்
தேவை என்ன சொல்லு …?
வாங்கி வருவேனே
வாழ்க்கை தருவேனே ..
உள்ளத்திலே ஒன்றை எண்ணி
உறவை இழிப்பதென்ன …?
வீதி ஆடவரை
விழியில் வைத்தவளே …
வாழ்வு தேறாது
வலிகள் ஓயாது ….
அழகு தேய்ந்து
அடி உடலும் நலிந்து …
அழுது களைப்பாய்
அவதி உறுவாய் ……
தேயும் கனவே – என்
தேவை அறிவாய் …
வாடி சாயையிலே
வலிகள் புரிவாய் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/09/2019