
ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்
ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.துப்பாக்கி கலாச்சாரம் இலங்கையில் அதிகரித்து வருவதை இந்த விடயம் அம்பல படுத்தி நிற்கிறது .
வகாரகளே பிரதேசத்தில் உள்ளூர் முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அவரது வீட்டை போலீசார் திடீரென சுற்றி வளர்த்தனர். அதன் பொழுதே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
49 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களாக இலங்கையில் துப்பாக்கி உடன் அலைகின்ற .பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் .இந்த கைதுக்கான நடவடிக்கை தொடர்பாக தெரிய வரவில்லை.
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரை 28க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளமை அனுரா அரசினுடைய சட்ட சீர் இன்மையை காண்பிக்கிறது.
பேருந்து விபத்துக்கள்
பேருந்து விபத்துக்கள் ,வாகன விபத்துக்கள் ,தொடர்பாக நாள்தோறும்ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சட்டவிரோதமான துப்பாக்கி பாவனை என்பன இலங்கையில் அதிகரித்து காணப்படுகின்றமை, இந்த விடயத்துடாக மேலும் ஒருமுறை அம்பலமாகி உள்ளது.