ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

வடக்கு ஈராக்கில் உள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டதில் சிதறிய துருக்கி முகாம்

Zelikan இராணுவ தளம் மீது குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இந்த இராணுவ தளம் பலத்த சேதமடைந்துள்ளது

தொடராக குறித்த இராணுவம் முகாம் மீது ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்திய வண்ணம் உள்ளனர்

குருதீஸ் போராளிகள் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

துருக்கி இராணுவத்தின் இந்த தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையினால் குருதீஸ் போராளிகள் அமைப்பினர் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் பின்வாங்கிய வண்ணம் உள்ளனர்

அமெரிக்கா இராணுவத்தின் துணையுடன் கனரக ஆயுதங்களை பெற்றுக்கொண்ட குருதீஸ் போராளிகள்


பின்னர் அதே அமெரிக்கா இராணுவத்தினால் கைவிட பட்ட நிலையில் துருக்கி ஈரான் இராணுவத்தால் பழி வாங்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

சிரியா,ஈராக்,துருக்கி,ஈரான் என நான்கு நாடுகள் எல்லையில் தனி நாடு கேட்டு போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீதே இந்த தாக்குதலை துருக்கி மேற்கொண்ட வண்ணம் உள்ளது

தொடரும் குருதீஸ் மக்களின் அவலம் தோய்ந்த இடம் பெயர்வும் போராளிகள் மரணங்களும் மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .ஆனால் துருக்கி நாடோ படுகொலைகளை புரிந்த வண்ணம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது

ஏவுகணை தாக்குதல் மூலம் துருக்கி முகாம் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்ட பொழுதும், அந்த இராணுவ தளத்தில் இருந்து துருக்கி இராணுவம் விலகி செல்லும் நிலையில் காணப்படவில்லை

அந்த முகாம் மீதான தொடர் ஏவுகணை தாக்குதல் துருக்கிய இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர்களை விரட்டுவதே நோக்கமாக உள்ளது

குருதீஸ் போராளிகள் மேற்கொள்ளும் இந்த உளவியல் யுத்த போரை அடையாளம் கண்டு கொண்ட துருக்கிய இராணுவத்தின் அதே தாக்குதலை குருதீஸ் போராளிகள் மீது மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

ஏவுகணை தாக்குதல் ஊடாக சிதறிய துருக்கி முகாம் இராணுவத்தின் சேத விபரங்களை துருக்கி இராணுவம் தெரிவிக்கவில்லை ,அதன் இழப்புக்களை அது மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

  • வன்னி மைந்தன்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply