ஏன் இறந்தாய்

காதலனுடன் ஓடிய மகள்

ஏன் இறந்தாய் …?

பூத்தவளும் பார்த்ததினால்
பூவொன்று பூத்ததம்மா
பூங்கொடியும் வீழ்ந்ததினால்
பூவென்ன செய்யுமம்மா

பாதி வாழ்வு முடியுமுன்ன
பார் கடந்து போனதென்ன
ஏன் இந்த அவசரமோ
ஏ மனமே கூறாயோ ….?

விழியெல்லாம் நீர் வைத்து
விடை பெற்று போனதென்ன …?
ஆகமங்கள் முடியுமுன்ன
ஆவி உடல் பிரித்ததென்ன …?

பெற்றவளே உன்னை தேடி
பிள்ளை இன்று கதறுதம்மா
தூக்கினில தொங்க முன்ன
துளி கூட என்னலையோ …?

உன்கவலை துளி போக்க
உற்றாரும் முனையலையோ ..?
நட்பான நட்புக்களும்
நங்கை உன்னை காக்கலையோ ..?

கல கலத்த உன் பேச்சு
காதில் இன்னும் ஒலிக்குதடி
உன் மரணம் பொய் தானோ
உள்ளம் ஏற்க மறுக்குதடி

விழியெல்லாம் நீர் வைத்து
விடை பெற்று போனவளே
எழுந்து வாராயோ
எம் துயர் போக்காயோ ,…..!

கண்ணீர் அஞ்சலி ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-01-2021
கொலண்டில் தூக்கில் தொங்கிய தங்கை துயரில் ….

Spread the love