எழுந்து வா…!


எழுந்து வா…!

தடை எடு படை எடு
தளரா துணிவெடு ..
அடியெடு உடை எடு
அடிமை தடை எடு …

ஒளி எடு வெடி எடு
ஒளி இடும் வாழ்விடு
புதிர் எடு தளிர் இடு
புதுயுகம் நீ இடு ….

குழி எடு முதல் இடு
குடித்தவன் உடல் நடு
வெடி எடு முதல் இடு
வெடித்தவன் உடல் வெட்டு ,,,,

தமிழ் எழு தடை எடு
தரணியில் உனை நடு
வலி எடு உயிர் எடு
வலித்தவர் உயிர் குடு

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 03-06-2020

புரியாதிருக்கும் -ஆனால் புதிர் இருக்கும்