
என் செல்ல நாய்க்குட்டியே
செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே
சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ
கடுங்கோவங்கொண்டு பிறர் உனை
கடி நாய் என அழைத்த போதிலும்
ரொம்ப பாசத்தோடு நான் உனை
ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில்
செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து
மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே
காலை மாலை என தவறாமல்
பாலை நான் தட்டில் ஊற்றுகையில்
நன்றியோடு என நோக்கி நாவால் வருடும்
நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே
எங்கு நான் வெளியில் சென்றிடினும்
என் வழித்துணையாக வந்த உனை
எவர் கடத்தி சென்றனர் இன்று
எப்படி இருக்கின்றாய் அங்கு நீ
நான் உறங்கிய போதில் என்னருகில்
விழித்திருந்து காவல் செய்வாயே
நீ இன்று இல்லாத இந்த நாட்களில்
விழிகள் துயில மறுப்பதை புரிவாயா
குரைக்க தெரிந்த என் அன்புஜீவன் நீ
என் குரலைக் கேட்டு மடியில் தவழும் உயிரே
இச்சாலை வழியே உனைத்தேடி நடக்கின்றேன்
என் பாதச் சுவடறிந்து மீண்டும் வந்துவிடு
உன்னோடு பழகிய நினைவுகளை
என் மனச்சுமைகளாக்கி இன்று நான்
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்
உனை கட்டியணைத்து முத்தம் தருவதற்கு
- ஏனோ இந்த பிரிவு
- திருமணநாள் நல்வாழ்த்துகள்
- கண்ணாமூச்சியா காதல்
- என்னவனே 2
- அச்சம் ஏனோ
- எப்படி நான் பேசிடுவேன்
- காதல் பிரிவு
- நீ நான்
- என்னவனே 1
- என்னை விடு
- என் செல்ல நாய்க்குட்டியே
- பித்து எனக்குப் பிடித்து
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி
- தோழனே…
- என்னவனே
- நட பிணமாய் இன்றும்
- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
- கவலைப் படுகிறேன்
- யார் மேல் குற்றம்
- சொல்வாயா
- உறங்கிய காதல்