எனக்கொரு பதில் சொல்லாயோ
கொஞ்சி பேசும் மொழி தனையே
மனம் கெஞ்சி கேட்க துடிக்குதடி
வஞ்சி உந்தன் பேரழகை – உன்
வளையல் சத்தம் காட்டுதடி
அஞ்சி அஞ்சி பேசி விடும்
அச்ச நாணம் பிடிக்குதடி
கொள்ளை பிரியம் வைத்திடவே
கொடி கூந்தல் அழைக்குதடி
சிந்தி வழியும் புன்னகையில்
சிறைச்சாலை நொறுங்குதடி
வெட்டி பார்க்கும் விழி அசைவில்
வெடி குண்டு வெடிக்குதடி
சாலையில் ஓடும் வண்டிகளை – உன்
சலங்கை சத்தம் ஒதுக்குதடி
உலக போரை தணித்திடவே
உன் உள்ள அமைதி துடிக்குதடி
இத்தனை பேறு கொண்டவளே
இதயம் நுழைந்த மர்மம் என்ன
எத்தனை நாள் எனை தொடர்வாய்
எனக்கொரு பதில் சொல்லாயோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-10-2024
0044 7536707793
- மீண்டும் பதிகின்றேன்
- நீறாகிப் போன நினைவுகள்
- கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்