உயிர் பலியை தடுப்பது யார் …?
உயிர் குடிக்க தானே இந்த போர் நடக்குது
உலகம் எல்லாம் கூடி தானே பலி எடுக்குது …
பேச்சு மேசை ஒன்றும் இங்கே பேசவில்லையோ ..?- இந்த
பேரழிவு தடுக்கத்தானே கூடவில்லையோ ..?
ஆட்சியிலே உள்ள கதிரை ஆடவில்லையோ ..?
அதி காரம் தந்த மக்கள் காணவில்லையோ ..?
நீளும் இந்த போருக்குகிங்கு முடிவு இல்லையோ ..?
நின் மதியாக வாழும் நிலை தோன்ற கூடுமோ ..?
ஆடும் இந்த ஆட்டத்திலே ஏது தோன்றுமோ ..?
அழிந்த பின்னர் மாந்தர் இங்கே ஏது தேறுமோ ..?
காக்கும் ஆட்சி கண்ணை மூடி உறங்கலாகுமோ ..?
கள பலிகள் தடுக்கா ஆட்சி தேவையாகுமோ ..?
உயிர் பலியை தடுப்பது யார் …?
வலிகளாலே விழிகளும் நீரை கொட்டுதே
வந்து வெடிக்கும் கணைகளும் உயிரை தட்டுதே …
வாழும் இந்த வாழ்க்கையிலே ஏது மிஞ்சுமோ ..?
வழி காட்டும் உயர் மனிதமும் வீழ்ந்து போனதோ ..?
செய்தி செல்லும் ஊடகங்கள் செவிகள் இல்லையோ ..?
செய்து வைத்த அரசியலே சதிகள் கொல்லுமோ..?
ஓர் உலகாய் வாழும் மக்கள் உயிர்கள் இல்லையா ..?
ஒருவன் மாறி ஒருவர் அழித்தால் உலகு மிஞ்சுமா ..?
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
அக்கம் -06-03-2017