உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம

சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற்றன.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் உயிர்

இழந்தவர்களின் ஈத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 8.45 மணியளவில் இடம் பெற்று இந்த நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மலையகத்திலும் இன்று (21.04.2020) வழிபாடுகள் நடைபெற்றன.

மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

கோவில்கள்இ விகாரைகள்இ பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்