உன் முகவரி சொல்லாயோ …?
தீ வீசும் பார்வையாலே
தீண்டி என்னை போனவளே …
நான் உண்ணும் நா பொசுங்கி
நயாகாராவை தேடுதடி ….
புயல் வீசி நடை பயில
புழுதிக்குள் விழி தவிக்க …
காணமல் போனவளே – என்
காப்பரண் எங்கயடி …?
வழி வந்து இடை மறித்து
வாலிபத்தை நோகடித்து …
தேட வைத்து போனவளே -என்
தேகம் வேர்வை கொட்டுதடி ….
மல்லிகையே உனை கண்டு
மஞ்சள் வெயில் வெக்குதடி …
கஞ்ச தனம் கொண்டவளே
காட்டி மேனி போவதுவோ …?
தாகத்தை தூண்டி விட்டு
தாமரையே போனதெங்கே …?
ஆகமத்தை நான் முடிக்க – உன்
அடைக்கலத்தை சொல்லி விடு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -02/12/2018