ஈழத் தமிழரை கிண்டலடித்த லண்டன் பத்திரிக்கை -மக்கள் போர்க்கொடி


ஈழத் தமிழரை கிண்டலடித்த லண்டன் பத்திரிக்கை -மக்கள் போர்க்கொடி

கடந்த மாதம் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் த கார்டியன் ஆங்கிலப் பத்திரிகை தங்களுடைய பக்கத்தில் விடுமுறை சார்ந்த கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தார்கள்.

கேள்வி: எந்த பிரபலமான விடுமுறை தீவுக்கு ஈழம் என்பது ஒரு பெயர்?
விடை: சிறிலங்கா

இந்த கேள்வியை அவர்கள் பிரசுரித்த நாளே பிரித்தானியாவின் இலங்கைப் பிரதிநிதி த கார்டியன் பத்திரிகைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அந்த கேள்வியினை நீக்கும் படி கேட்க அதற்கு

இணங்கி த கார்டியன் பத்திரிகையும் அதனை நீக்கி விட்டார்கள். அதற்கு பிறகு பலதரப்பால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த கேள்வியினை மீளவும் பிரசுரிக்க வேண்டியும் பத்திரிகையில்

மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இனவாத இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக இனப்படுகொலையின் மத்தியில் நின்று கொண்டிருக்கும்

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை அவர்கள் எடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பிரித்தானியாவில்

எத்தனையோ தமிழ் மக்களின் மனதினை இச்செயல் புண்படுத்தியுள்ளது என்பதினை அவர்கள் அறிவார்கள் என்று தான் நாம் நினைக்கின்றோம்.

பிரித்தானிய இளையோர் அமைப்பு தொடர்ச்சியாக த கார்டியன் பத்திரிகையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வரலாற்றினை புரிய

வைக்க முற்பட்டது, அதனை ஏற்க மறுத்த த கார்டியன் பத்திரிகை நிருபர் எலிசபெத் ரிப்பன்ஸ் கூறுகையில்

“……….நவீன காலங்களில் ஒரு சொல் நீண்ட மற்றும் வேதனையான உள்நாட்டு யுத்தத்துடன் மிகவும் தொடர்புடையதாக இருந்தால் அக்கேள்வியானது பொழுதுபோக்குக்காக வடிவமைக்கப்பட்ட

வினாடி வினாவுக்கு பொருத்தமானதாக கருதப்படவில்லை. போராட்டங்கள் நடைபெறும் வேறு நாடுகளுக்கும் இது ஒத்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், தனிபட பிரித்து

பார்க்கவேண்டும் அந்த கேள்வி சரியா அல்லது தவறா என்பதற்கு . சூழல் மற்றும் பின்னணி வழங்கப்படும் அரசியல் அல்லது இராஜதந்திர கட்டுரைக்கு வினாடி வினா மிகவும் வேறுபட்டது……….”

இவ்வாறாக அந்த நிருபர் பதிலளித்திருந்தார், மறுபடியும் எம்மால் ஒரு ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு எமது வரலாற்றினை எழுதியும் அவர்களின் பதிலுக்கு கண்டனம்

தெரிவித்தும் பதில் அனுப்பியுள்ளோம். அதே சமயம் அவர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கும் வண்ணம் அனைத்து

இளையோர்களையும் ஒருங்கிணைத்து சமூகவலைத்தளங்களினூடாக அவர்களுக்கு எமது எதிர்ப்பினை காட்டி வருகின்றோம்.

தமிழ் மக்கள் பலர் மாத சந்தா கட்டி பத்திரிகை படிப்பவர்கள் அதேபோல இணைய தளத்தில் வசிப்பவர்கள் என பலர் த கார்டியன் பத்திரிகைக்கு கட்டணம் செலுத்தி வருகின்றீர்கள்.

எங்களது மக்களின், எங்களது இனத்தின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் எல்லாருமே இனப்படுகொலையின் பங்குதாரர்கள் ஆவார்கள். தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு த கார்டியன்

பத்திரிகைக்கு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் எதிர்ப்பினை காட்டுதல் அவசியம், அதற்காக நாம் ஏற்கனவே அமைத்து

வைத்துள்ள கடிதத்தில் உங்கள் பெயரினை இணைத்து அனுப்பி வைக்கலாம். கீழ் காணும் இணைப்பை அழுத்தினால் கடிதம் தானாகவே அமைக்கப்படுமாறு வடிவமைக்கப்படுள்ளது.

உங்கள் கணனியில் அல்லது கைத்தொலைபேசியில் இவ் இணைப்பை அழுத்தி நீங்கள் அதனை பூர்த்தி செய்து கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் எங்களால்

மேற்கொள்ளப்படும் பரப்புரைகளில் கலந்து தாங்களும் உங்கள் கருத்தினை பத்திரிகைக்கு தெரிவிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு எமது இணைய தளத்தினை பார்வையிடுங்கள்

ஈழத் தமிழரை கிண்டலடித்
ஈழத் தமிழரை கிண்டலடித்