இவர் தான் கடவுள் …!


இவர் தான் கடவுள் …!

எழுதாத புத்தகத்தை
எடுத்து படிக்கத் தான்
அழகாய் ஒரு கூட்டம்
அலைகிறது இங்கே …

கண்ணீரில் மகிழவும்
கை தட்டி சிரிக்கவும் …
ஏய் மனித இங்கே
ஏராளம் கூட்டம் ….

வாயடி ஓசையில்
வானத்தில் வெடிகள் …
ஆடையில்லா நிலவு
அசிங்க மானது ….

அம்மணமாய் ஒருவன்
அருகில் இருக்க ..
பசியோடு ஒருவன்
பக்கம் இருக்க

கண்டு கொள்ள மனிதங்கள்
கை தொழுதென்ன …?
ஆண்டவனை தேடுகிறாய்…..
அருகில் உள்ளான் காணலையோ …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -31-05-2020