இழி செய்தார் நிலை பாரீர் …!
இரு கரத்தில் பலமிருக்க
இதயமதில் துணிவிருக்க ….
விழுந்தழுதல் முறையாமோ …?
விதி செய்தல் பிழையாமோ …?
முன் சிந்தை சிறகடிக்க
முளை வந்து வான் விழிக்க ….
கை தொழுதே பார் கூடும்
கட்டு கோட்டை ஊர் மிரளும் ….
எது வெல்லலாம் வாய் உரைத்தார்
எள்ளி நகை ஆடி நின்றார் ….
முன் வரவே அஞ்சுகின்றார்
முன் செயலால் வருந்துகிறார் …..
இல்லையென்று முன் அன்று
இழி செய்தார் நிலை பாரும் …
உள்ளுரத்தை முன் விதைத்து
உலகாலும் மகிழ்வு பாரும் …..
தோல்வி கண்டு அஞ்சுகின்ற
தோள்களுக்கு முன்னுரை யான் ….
இழி நிலைகள் செய்தாற்கு
இறைவன் தந்த தண்டனை தான் …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -14/06/2019